×

நிரவ் மோடியின் ஊழியர் எகிப்தில் கைது

கெய்ரோ: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,400 கோடி கடன் பெற்று மோசடி செய்த  மெகுல் சோக்சி மற்றும் அவரது மருமகனான வைர வியாபாரி நிரவ் மோடி ஆகியோர்  குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறினர். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து  வரும் நிலையில் கடந்த 2018ம் ஆண்டில் நிரவ் மோடி, அவரது சகோதரர் நிஷால்  மோடி மற்றும் அவரது ஊழியர் சுபாஷ் சங்கர் ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர்  நோட்டீசை இன்டர்போல் வெளியிட்டது. நிரவ் மோடியின் 1,000 கோடி ரூபாய்  மதிப்புள்ள சொத்துக்களை ஏற்கனவே அமலாக்கத்துறை முடக்கியது. இந்நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் பதுங்கியிருந்த நிரவ் மோடியின் நெருங்கிய கூட்டாளியும் ஊழியருமான சுபாஷ் சங்கர் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது. அவரை மும்பைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளன. …

The post நிரவ் மோடியின் ஊழியர் எகிப்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Nirav Modi ,Egypt ,Cairo ,Mehul Choksi ,Punjab National Bank ,Dinakaran ,
× RELATED காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர...